புதுக்காதலி
உன் முகம் கண்டு
என் நாள் தொடங்கிடுதே
உன் முகம் கொண்டு
என் நாள் முடிகிறதே
என்னருகே
நீயிருக்க
உள்ளமெல்லாம் துள்ளல்
உன் விழியருகே
நானிருக்க
உடலெல்லாம் நாணல்
தொட்டால்
சிணுங்குகிறாய்
விட்டால்
தொடர்கிறாய்
என் முகபாவனைகளுக்கு
பரீட்சியமாகிறாய்
என் முழுத்தோரணைகளை
பதித்து கொள்கிறாய்
உன் செயலிகளால்
என்னை செயலிழக்க
செய்கிறாய்
என்னோடு
நகர்கிறாய்
என் நிழலென
தொடர்கிறாய்
-புதுக்காதலி (ஸ்மார்ட் போன்)