இதற்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான்

நிலவைக் கட்டியணைத்தே
நித்தமும் தூங்குகிறேன்

நட்சத்திர நாணயம் எடுத்து
நாள்தோறும் செலவழிக்கிறேன்

கடல்மேல் நடந்தே
கண்டங்கள் கடக்கிறேன்

உப்புக்கடல் நீரும்
உயிர்காக்கும் அமிர்தமானது

உண்ணும் உணவில்கூட
உன்முகம்தான் தெரிகிறது

அதிகாலை புல்நுனியில்
அடுக்கிவைத்த பனியானேன்

நண்பர்கள் கூட்டத்தில்
நான்மட்டும் தனியானேன்

வளிமண்டல காற்றெல்லாம்
வாசனை திரவியமானது

வாசிக்கும் கவிதையில் எல்லாம்
உன்வாசனை வருகிறது

தரையில் நடக்கும்போதே
அரையடி மிதக்கிறேன்

என்வீட்டு தெருமறந்து
வேறுதெரு நடக்கிறேன்

பாடலின் இசையை ரசித்தவன்
இன்று வரிகளையும் ரசிக்கிறேன்

என்வீட்டுகண்ணாடி இப்போதுதான்
என்னை அழகாய் காட்டுகிறது்

விடையே இல்லா கேள்விக்கு
விடையை தேடி அலைகிறேன்

இரவின் நீளத்தை
இப்போதுதான் உணர்கிறேன்

எதையோ நினைத்து அழுகிறேன்

என்னவென்றே தெரியாமல்
சிரிக்கிறேன்

இதுதான் இதுதான்
இப்போதைய நான்

இதற்கெல்லாம் காரணம்
நீ மட்டும் தான்.......

எழுதியவர் : பெ வீரா (4-Oct-17, 4:28 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 274

மேலே