அவள் ஒரு தொடர்கதை

உன் கொழுசின்
சலங்கையில் உதிரும் நாதம்
என் செவிகளை மட்டும்
தீண்டவில்லையடி!
உன்னை தவிர்க்க
நினைத்த முடிவுகளின்
முடிச்சையும் சேர்த்தே அவிழ்க்கின்றது...!
வேல் விழிகள் மனதில்
துளைத்திட்ட இடமெங்கே?
தழும்புகள் மீண்டும்
காதல் காயங்களாக
பரிணாமம் கொள்கின்றது. .!
மைகள் உன் இமைகளில்
கருமையை மட்டும் பூசாமல்
ஏனடி?
என்னுள் வசந்தத்தையும்
பூசுகின்றது!
குறுநகையும்...
நாணத்தின் அசைவுகளும்....
இனி
சொல்வதர்க்கு ஒன்றுமில்லை
கார்முகில்தனில்
எத்தனை துளிகள்
எண்ணியவர் யார்?
புள்ளியின் இலக்கணம்
சொன்ன மொழிதான் ஏதடி?

எழுதியவர் : சுரேஷ் குமார் (7-Oct-17, 12:27 am)
பார்வை : 216

மேலே