மழையே மழையே
மழை....
பூமி மீது கொண்ட
காதலில் மேகம் எழுதும்
கவிதை...
எழுதும்போது மட்டுமே
படிக்க முடிந்த கவிதை
வாழ்ந்திருக்கும் பயிர்களின்
பசுமையிலும்
நிலத்தடி நீரிலும்...
புத்தகங்களில் நிரந்தரக்
கவிதைகள் வாசித்து
நேசிக்கப்பட்டாலும்
யாசிக்கப்படுவதென்னவோ
மேகம் அவ்வப்போது எழுதும்
தற்காலிக மழைக்
கவிதைகள்தானே..
🙋🏻♂👍😀