காதலோடு காதலாகி
நீ என்னை காதலிக்கிறாயா?
என நீயும் நானும்
மாறி மாறி
நம்மை கேட்டுக் கொண்டோம்
கேள்விக் குறிகள்
இரண்டும் இணைந்து
காதல் குறியாய் தானாய் மாறும்!
வாழ்வின்
பெருங்கோபப் புயல் வீசினாலும்
நம் கேள்விக் குறிகளை
இணைத்தே வைப்போம்
நம் பிரிவைத் தவீர்க்க!
கால ஓட்டத்தில்
நமக்குள் ரசனை மாற்றம் ஏற்பட்டு
நம் ரசாயன மாற்றத்தை தகர்த்து
நம்மை எதிர் எதிர் துருவங்களில் நிறுத்தினாலும்
காந்தமாகி ஈர்த்துக் கொள்வோம்!
காலம் தாண்டியும்
காதலோடு காதலாகி
காற்றில் கலந்திருப்போமடி