சிறகுகள்

கூண்டுக்குள்
அடைபட்டுக்கொண்டு
பறக்க இயலுமோ
முடிகிறதே

சீட் பெல்ட்க்குள்
சிறையிட்டுக்க்கொண்டு
ஸ்டெயரிங் பிடித்துக்கொண்டு
என் கைய்ப்பிடியில்
நகரத் தொடங்குகிற
முதல் நெடுஞ்சாலை
நான்குசக்கர வாகன
பயணம்...

பறப்பதைப்போல தான்
எனக்கு !!
வாகனத்தில் ஒரு
ஆகாய பயணம்
ஆஹாவென மனம்

இதுவரை
சாலையோர மரங்களை
மட்டும் ரசித்த
என் கண்கள்
இன்று சாலையின்
ஒவ்வொரு வளைவுகளையும்
ஓயாத வாகனங்களையும்
முழுவதுமாக ரசித்தபடி ..

சாலையோடு
தொலையாத மனம்
மட்டும் படபடத்து
கொண்டிருந்தது
மேகத்துக்கு இடையில்
ஒளியும் நிலவாய்
வாகன கூட்டத்துக்கு
இடையில் என் வாகனம்
என்றான போது......

பரபரவென்ற மனசோடு
படபடவென்ற வேகத்தோடு
பறந்து முடிகிறது
பட்டாம்பூச்சி பயணம் ...

சக்கரங்கள் நின்று
கதவுகள் திறந்து
வெளியே வந்ததும்
திரும்பி பார்க்கும்
எனக்கு காரின்
குட்டி கதவுகள்
குட்டிச் சிறகுகளாகவே
தெரிந்தது

இறகு உடைந்த
பறவையாக நான்
இலக்கற்ற பாதையில்
நடக்க தொடங்குகிறேன்...
எனக்கான சிறகுகளுக்கு
என்று சொந்தக்காரன்
ஆவேனோ என்ற
தீரா ஏக்கத்துடன் !!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (7-Oct-17, 11:14 pm)
Tanglish : siragukal
பார்வை : 782

மேலே