அன்பு

அன்பால் மனத்தை நிரப்பிவிட்டால்
அமைதி என்றும் குடியிருக்கும் !
அன்பே மனிதம் மலர்விக்கும்
அகத்தை மிகவும் அழகாக்கும் !
அன்பால் பகையும் உறவாகும்
அதுவே பித்தம் தெளிவாக்கும் !
அன்பே இறைவன் அருட்கொடையாம்
அறிந்தால் வாழ்வும் வரமாகும் !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Oct-17, 1:04 pm)
Tanglish : anbu
பார்வை : 102

மேலே