கலைவாணி வாழ்த்து

வீணை தரும் இசையும் அவளே
இசை தரும் ஸ்வரங்கள் அவளே
ஸ்வரங்கள் தரும் ராகம் அவளே
ராகம் தரும் தாளம் அவளே
தாளம் தரும் பாடல் அவளே
பாடல் தரும் ஓசை அவளே
ஓசை தரும் இன்பம் அவளே
கல்வி தரும் கடவுள் அவளே
கலை தரும் கலை மகளே
கூத்தன் கட்டிய கோயில் கொண்டாள்
கூத்தனூரில் குடி அமர்ந்தாள்
வெண் தாமரை பூவில் வீற்றிருக்கும் அன்னை
அவள்அருள் நாடி, பாடி துதிப்போம்
சரஸ்வதி, கலைவாணி, பாரதி என பெயர் சூட்டி
அவள் பொற்பாதம் பணிந்து வணங்குவோம்
இயல், இசை, நாடகம் வளரும்
நம் கல்வியும், கேள்வியும் சிறக்கும்

 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதியவர் : பாரதி கேசன் எங்கிற பஞ்சாப (13-Oct-17, 11:23 pm)
Tanglish : kalavaani vaazthu
பார்வை : 871

மேலே