தமிழமிழ்து
தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் !
அமிழ்த மாகி வந்து நின்ற
ஆசியே தமிழ் தமிழ் !
முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற
முறுவலே தமிழ் தமிழ் !
அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்
ஆற்றலே தமிழ் தமிழ் !
ஈசன் தந்த டமரு கத்தின்
இசையடா தமிழ் தமிழ் !
தேசம் யாவும் நேசம் வைத்த
தேனடா தமிழ் தமிழ் !
நாவெ டுத்த மனிதன் சொன்ன
நல்லசொல் தமிழ் தமிழ் !
பாவெ டுத்த கவிஞர் சொல்லும்
பாட்டெலாம் தமிழ் தமிழ் !
வான ளந்து மண்ண ளந்த
வாசமே தமிழ் தமிழ் !
ஞான முக்தி அறிவு னுக்தி
நல்குமே தமிழ் தமிழ் !
இனிமை கொண்ட மொழியி தெங்கள்
இறையடா தமிழ் தமிழ் !
மனிதர் வாழ மார்க்கம் சொல்லும்
மறையடா தமிழ் தமிழ் !
காற்றி லெங்கும் புகழ் மணக்கக்
காணுமே தமிழ் தமிழ் !
போற்றி உலக மோதும் பாஷை !
பொன்னடா தமிழ் தமிழ் !
தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் !
அமிழ்த மாகி வந்த தெங்கள்
ஆவியே தமிழ் தமிழ் !!
-விவேக்பாரதி
11.10.2017