என் தாய்

அறியாத பருவம்
புரியாத பாசை
குழைந்தை திருமணம்
ஆம் நடந்தது என் தாய்க்கும்...

கையை பிடித்து காலில் விழுந்தவளை
அள்ளி கொடுத்தான் காளை
அவள் பெற்றோரிடம்
பெற்றோரை பிரிந்து வாடுகிறேன்
என்று எண்ணினானோ...

கனவுகள் கலைந்தது
துக்கம் அவள் நெஞ்சை தளும்பியது
பெற்றெடுத்தாள் பிள்ளை இரண்டை
தன போல் பெண்ணாக...

குழைந்தையின் சிரிப்பு ஒலியில்
தன்னை மறந்து சிரித்து கிடந்தால்...
வாழ்வில் ஒளியை இழந்தவள்
எங்கள் வாழ்க்கைக்கு
கலங்கரை விளக்காய் வந்தவள் ...

என் தாய் திலகவதிக்கு
நெற்றியில் மங்கள திலகமிட்டு
நான் கண்டதில்லை...

தனி மரம் தோப்பாகாது
என்பதை பொய்பிக்க வந்தவள்
எங்கள் வாழ்க்கையை மெய்ப்பிக்க வந்தவள்..

பிறந்தது முதல் தந்தையின் முகத்தை
புகைபடத்தில் கூட பார்க்காதவள்
இன்று பார்க்க துடிக்கிறேன்...
பாசத்தில் கட்டி தழுவி
உறவு கொண்டாடிட அல்ல..
உன்னால் உதாசின படுத்தப்பட்ட கற்களும்
சிற்பங்கள் ஆயின என்பதை உணர்த்திட...

அம்மா என்று சொல்லும்போது
ஆயிரம் உணர்வுகள் என்னுள்ளே...
சொல்லிட இந்த ஒரு ஜென்மம் போதுமா...
போதாது போதவே போதாது.....

இக்கவிதை என் தாய்க்கு
என் உதிரத்தால் சமர்ப்பிக்கிறேன்...


எழுதியவர் : KAVITHA (27-Jul-11, 2:12 pm)
Tanglish : en thaay
பார்வை : 499

மேலே