நீயும் நானும்

ஆசையோடு சந்திக்கும்
காதலர்களாய்
நீயும் நானும் எதிர் எதிர்
திசையில்
ஆர தழுவிக்கொள்ளும்
ஆசையில்
தொலைதூரம் என்றாலும்
முயற்சியில்
பார்போர் கண்களுக்கு
இனைந்த காதலர்கள்!
நம்மை பிரிக்கும் சக்தியாய்
அகண்டவெளி நமக்கிடையில்,
காதலை எதிர்க்கும்
பெற்றோராய்!
தெரிந்த உண்மை,
நாம் மட்டும் சளைக்காது
முயற்சியில்
பலிக்காது என்று தெரிந்த
காதலர்களாய்
பலகாலமாய்!
நா.சேகர்