ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை

ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை..
ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை...

மதங்கள் பிரிப்பதாலே உலக மக்களுக்குள் ஒற்றுமை இல்லை...
சாதிகள் பிரிப்பதாலே மத மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லை...

கட்சிகள் பிரிப்பதாலே அரசியல் மக்களுக்குள் ஒற்றுமை இல்லை...

ஒற்றுமை இல்லையென்று எண்ணற்ற காரணங்கள் உலகில் வாழ பிரிவினைகளுக்கு மனிதர்கள் உரிமை கோர
காதலர்களின் பிரிவினையில் மடிகிறது காதல்...
தம்பதிகளின் பிரிவினையில் தோற்கிறது இல்லறம்...
நண்பர்களின் பிரிவினையில் நாசமாகிறது நட்பு...
சகோதரர்களின் பிரிவினையில் உடைகிறது குடும்பம்...

பிரிவினைகளைப் பாராட்டிக் கொண்டு வாழ்க்கையைத் தேடும் நெஞ்சங்களே உணருங்கள்..
ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை...

துரோகமில்லா, பகைமை முளைக்காத ஒற்றுமையில் உள்ளது வாழ்க்கை...
வாழ பிறந்த பூமியில் சாக நடக்கிறது போராட்டம்...
மனிதர்களின் உள்ளங்களில் பிரிவினை வாத சாத்தானின் தேரோட்டம்...
கனவுகளின் உயிரோட்டம்...
குழிதோண்டி புதைத்துவிட்டு ஓடுகிறது வாழ்க்கையின் ஓட்டம்...
இருப்பினும் குரல் கொடுப்பேன்...
மனிதர்களே! மனதால் ஒன்றுபடுங்கள்...
பூலோக வாழ்வை சொர்க்கமாக்குங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Oct-17, 6:21 pm)
பார்வை : 4527

மேலே