தூய்மை இந்தியாவில் ஏழையின் நிலை

அங்கே ஒரு கூட்டம்
தூய்மை இந்தியா திட்டத்தில்
உயிர் குடிக்கிறது ..........

இங்கே லஞ்சம் திண்ணும்
கழுகு கூட்டம் ஊசலாடும்
உயிரையும் பிச்சி திண்று
ஏப்பம் விட ஆந்தையை விழித்துக்கிடக்கிறது ..........

வாங்கும் ஒரு படி அரிசிக்கு
வரி எனும் பெயரில் தீ மூட்டினாய் ,
இரு வேளை கஞ்சியும் ஒரு வேளை ஆனது
என் ஏழைக்கு ……..

கோடியில் புழங்கும் வரி ஏய்ப்பு ஜாம்பவான்களிடம்
மண்டியிட்டு மழுங்கும் அரசே
ஒன்றை புரிந்துகொள்
மாணமென்பது “வியர்வையை நேசிப்பவனுக்கு” மட்டும்தான் …..

நீ எந்த அகராதியில் நிற்கிறாய் என்பதை
அடிகோடிட்டு செல்லாமலே உனக்கு புரியும் ………..

இருக்கும் மண் புழுக்களை அழித்துவிட்டு
மலட்டு மண்ணை வைத்து என்ன செய்யப்போகிறாய் ..........?

ஹிட்டலருக்கு கூட கொஞ்சம் இரக்கம் இருந்ததாய்
ஒரு வரி உண்டு ………..
இந்த அரசை காட்டிலும் ...........

அடித்தட்டு மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்யும் அரசே வாழ்க பாரதம்...............

எழுதியவர் : ரேவதி மணி (24-Oct-17, 4:13 pm)
பார்வை : 124

மேலே