மேகமோ அவள்

மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்

அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
*
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்

என் நிழலும் ஏனையே உதரும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
*
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்

இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்

எழுதியவர் : கவிஞ்சர் விவேக் (25-Oct-17, 1:06 pm)
Tanglish : megamo aval
பார்வை : 2191

மேலே