ரோசாபூ

ரோசாப்பூ

தித்திக்கும் தேன் பொதித்து

காவலுக்கு முள் பதித்து

காத்து விட துடித்த துடிப்பு
தெரிந்தாலும்

கண்பட்டு,கவரப்பட்டு,

கைபட்டு,கடத்தப்பட்டபோது

கர்வப்பட்டு நின்ற நின் நிலை

கண்ணில் நிழலாடுகின்றதே

கிள்ளித்தந்த அழகா அது

அள்ளித்தந்த அழகல்லவோ

போட்டியா?பொறாமையா?

பதில் சொல்வாயா ரோசாவே?
நா.சேகர்

எழுதியவர் : Sekar N (28-Oct-17, 8:46 am)
Tanglish : rosaapoo
பார்வை : 119

மேலே