ஆளப்பிறந்தவன் இவனடா

அம்மா , கனவு ஒன்று கண்டனே ,

சிங்கம் ஒன்று காட்டிலே
குட்டி யானை ஒன்றினை துரத்தி சென்ற போதிலே ,
அலறல் ஒலிக்கேட்கவே, திடுக்கிட்ட தாயுமே
விரைந்து சென்று சிங்கத்தை
தும்பிக்கையில் சுழற்றவே
சிங்கம் தொலைந்து போனதே !!!

அம்மா , நீயும் யானைபோல் என் இடர்களை கலைவையோ ?

உன் கோபம் கொண்ட கண்டிப்பும் - நான்
தவறாய் கூட தீதொன்றை செய்வதில் இருந்து தடுத்திடவோ ?

போதும் என்று சொல்லியே கட்டுப்படுத்தும் முயற்சியும்
உலகம் மிகவும் பெரிதென எனக்கு
உணர்த்த செய்யும் உத்தியோ ?

சுற்றத்தவறின் நட்பிலும் , உறவுகளின் பிணைப்பிலும் ,
மனிதன் மாறுபட்டவன் என்ற உண்மை உணர்ந்தேனே !!!

பள்ளி படிப்பு கற்பிக்க ஆசான் பலர் உள்ளனர் ,
வாழ்வில் உயர்ந்து சாதிக்க
அன்னை தந்தை இருவரின் வாழ்க்கை பாடமும் வேண்டுமே !!

தோல்வி என்ற முதல் படி கடந்து பலவெற்றியினை
ஈட்டி நானும் மகிழ்ந்திட
காற்றை போல எனக்குளே
மனதின் உறுதியை புகுத்திடுவாய் !!!
அன்பாய் பணிகிறேன் உன்னிடமே
அன்னை அருள் புரிந்திடுவாய் !!!

எழுதியவர் : திவ்யா சத்ய பிரகாஷ் (30-Oct-17, 12:52 pm)
பார்வை : 170

மேலே