புரிந்து கொள்வாயா
ஓடையை தேடி அலையும் கொக்குவென
தாமரை இருக்கும் அன்பு நதியை தேடி அலைகிறேன்
நீயோ எப்பொழுதாவது வறண்ட ஓடையை
நடந்து நலம் விசாரித்து செல்லும் கொக்கை போல
ஓரிரு வானத்தை மட்டும் என்னிடம் பேசி செல்கிறாய் தமிழ் இசை
உரு மீன் வருகையை எதிர் பார்த்து
காத்திருக்கிறேன் முக (நூலில்) தூண்டில் கட்டி
புழுவாக என் ஆசை வரிகளை போட்டு
கடைசிவரை என் ஆசைகளை துடிக்க விட்டே செல்கிறாய் சீனை போட்டு
நேரம் கிடைக்கும் போதெல்லாம்
உன்னோடு பேசி சண்டையிட்டு மகிழ ஆசை
இயற்கையும் எனக்கொரு சதிகாரன் ஆகிவிடுகிறான்
வேலை பளுவை அதிகரித்து உன்னோடு பேச விடாமல்
உன் வருகையின் போது அடிக்கடி நான் இருப்பதில்லை
என்வருகையின் போது பொதுவாய் நீ இருப்பதில்லை
காலத்தின் கட்டாயம் பிரிந்து கிடக்கிறோம் வேற்றுமையில்
காலத்தில் கட்டாயம் இணைவோம் நம் ஒற்றுமையில் என நம்புகிறேன் ....