கவிதைகளும் தத்துவங்களும் I

௧, தற்பெருமை பேசிக்கொண்டிருக்கும்
நேரங்களைத்தான்
எதிரிகள் முன்னேருவதற்கான வாய்ப்பாக
கொடுத்துவிடுகிறோம்.

௨, பூமி நரகமாகிக்கொண்டேயிருக்கிறது
புரியாதவர்கள்
குழந்தைகளையும் தெருக்களையும் பாருங்கள்
கூடி விளையாடுவதேயில்லை…


௩, சாகும்வரை போராடு
இறந்து - பின்
உயிர்பெற்றவர்களும்
இங்கு ஏராளம்


௪, தேகச் சுருக்கமும்
நிரந்தர நரையுமே
முதுமையின் அழகு

௫, கைகள்
இசை மீட்ட
ஒலிக்கிறது
ஊனத்தின் நாதம்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (5-Nov-17, 1:13 pm)
பார்வை : 2149

மேலே