மழை
கேளீர் கேளீர் என் கதையைக் கேளிர்
வானிலிருந்து குதித்து வந்தேன்
பூமி குளிர இறங்கி வந்தேன்
ஏரிகுளம் தேடி வந்தேன்
ஓடையாக பொங்கி வந்தேன்
பசுமைப் பரப்பை பார்க்க வந்தேன்
பார் முழுதும் சுற்றி வந்தேன்
சிறார் மகிழ பொழிந்து வந்தேன்
அடுக்கி வைத்த வீடுகள்
ஆக்கிரமிப்பு செய்த மனிதர்கள்
தூர்வாரா ஏரிகள்
துண்டு போட்ட மனிதர்கள்
வாடி நின்றேன்
ஏங்கி நின்றேன்
தேங்கி நின்றேன்
கழிவு நீரில் கலந்தேன்
வீட்டுக்குள் புகுந்தேன்
வசவுகளைச் சுமந்தேன்
சுயநல மனிதர்களால்
சுமையாகிப் போனேன்