தரிசனம்

காற்றோட்டமில்லாத
கருவறையில்
வியர்த்து விறுவிறுத்து
எக்கித் தள்ளிய
கோவில் கூட்டத்தின்
சிடுசிடுப்பில் வெறுப்போடு
நூறு ரூபாய் டிக்கெட்டிலும்
தள்ளு முள்ளுவில் தள்ளாடித் தவித்து
அரை நொடியில் ஆண்டவனை
அரை குறையாய் தரிசித்து
வெளியே வந்ததும்
ஜில்லென்று முகத்தினை
செல்லமாய் வருடிச் சென்ற
காற்றின் குளிர்ச்சியில்
உணர்ந்தேன் கடவுளை
முழுமையாக
இலவசமாக !

எழுதியவர் : தெரியவில்லை (13-Nov-17, 9:49 pm)
Tanglish : tharisanam
பார்வை : 103

மேலே