அழகு அழகு

உற்சாக நேரத்தில்
உன் செல்ல கடிகள் அழகு

முத்தத்தில் ஈரமான
உன் இதழ்களின் வரிகள் அழகு

நம் முத்த சத்தங்களில்
உன் வெட்க சிணுங்கள் அழகு

குமரியாய் பேச தொடங்கி - பின்
மழலையாய் மாறும் கொஞ்சல் பேச்சு அழகு



இச் என்று நான் முத்தத்தை திருடும்போது
சட்டென்ற உன் திகைப்பு அழகு

நீ செல்லமாக எனக்கு வைத்த
'முத்தபிசாசு' பெயரும் அழகு

என் கன்னங்களை அலங்கரிக்கும்
உன் வண்ண இதழ் கோலங்கள் அழகு

காற்றுக்கு வழிவிடாமல் மூச்சுதிணற
நீ முத்தமிட்ட தருணங்கள் அழகு

💐💐💐💐💐💐💐💐💐

கவிப் புயல்
சஜா. வவுனியா

எழுதியவர் : சஜா (16-Nov-17, 12:18 am)
சேர்த்தது : சஜா
Tanglish : alagu alagu
பார்வை : 91

மேலே