மன நோய்

அரும்பு மீசை முளைக்கும் முன்பே திருடும் மனப்பான்மை வளர்ந்து வரும் சமூகத்தில் மக்கள் மனதைத் திருடிய தலைவர்கள் வாழ்ந்த காலமெல்லாம் போய் உடைமைகளைத் திருடும் திருடர்களின் கூடாரமாக மாறிவருவதை நிகழ்த்திக் காட்டும் நிகழ்வுகளின் அரங்கேற்றத்தில் இருள் மனங்களின் பரவல் எங்கும் வியாபிக்க, சுயநல எண்ணங்களின் தாக்கம் சரிகளையும் தவறுகளையும் பிரித்தறிய இயலாத சூழலை உருவாக்க, கண்களிரண்டும் வட்டமிடும், அடுத்தவர் உடைமைகளை யாரும் அறியாரென்றெண்ணி எடுத்துச் செல்லும் ஏமாற்றும் குணமே திருட்டுத்தனத்தின் அடித்தளம்...

யாரும் அறியாரென்றெண்ணி சிறு தவறுகளென்று ஆற்றுதலும் வளரும் காலப்போக்கில் பெரும் தவறுகளாய்...

அறியாத மூடர்கள் தவறுகளை அனுமதிக்கிறார்கள்...

திருடர்களின் ஆதரவு திருடர்களின் பக்கமாகவே இருக்கிறது...

ஊழல் என்பது அரசியல், வியாபாரம் என்ற துறைகளில் இல்லை...
மனிதர்களின் மனதில் உள்ளது...
அதையே பொக்கிஷமாக வளர்க்கிறார்கள்...

தவறுகளை ஒப்புக் கொள்ளப் பயந்தவர்களின் மனதில் தூய்மை எண்ணங்கள் பிறப்பெடுக்க வாய்ப்பே இல்லை...

உண்மையின் நிதர்சனம் ஒருநாள் புரியும்...
புரியும் நேரம் அதிக வலிகளென்ற நரகத்தில் உயிருள்ள பிணமாய் வாழ நேரிடும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Nov-17, 6:03 pm)
Tanglish : mana noy
பார்வை : 1733

மேலே