பாவக்கணக்கு

என் பாவக்கணக்கை
பட்டியல் போட்டால்
நெஞ்சம் பதறுதமா
சொல்ல நா குழறுதமா
முன்னம் நான் செய்த
வினைதானோ இச்
ஜென்மம் எடுத்ததமா
இது இன்னும் தொடர்ந்திடுமா ??

என் பாவ கணக்கை
பட்டியல் போட்டால்
நெஞ்சம் பதறுதமா
உள்ளம் நடுங்குதமா ..

ஆசை வயப்பட்டு
மனம் லயித்து செய்த தீவிணை
ஆயிரம் உள்ளதமா
பல ஆயிரம் உள்ளதமா

நித்தம் ஓடி திரிந்தாலும்
நொந்து களைத்தாலும் -மனித
ஆசை ஒயிவதில்லையம்மா
ஆவல் தேய்வதில்லையமா

ஞான திரையிட்டு
ஈன செயல்தனை எண்ணி
நெஞ்சம் வலிக்குதம்மா
அதை எண்ணம் மறைத்தம்மா

ஒரு மானம் ,அவமானம்
எல்லாம் மறந்து
மோகம் முளைத்ததம்மா
புது மோகம் முளைத்ததம்மா...

என் பாவக்கணக்கை
பட்டியல் போட்டால்
நெஞ்சம் பதறுதம்மா
சொல்ல நா குழறுதம்மா
முன்ன நான் செய்த
வினையோ இந்த
ஜென்மம் எடுத்ததம்மா
இது இன்னும் தொடர்ந்திடுமா ??

சுட்டு தெரிந்ததும்
பட்டு தெளிந்ததும்
பக்தி உதித்ததம்மா
உன்மேல் பக்தி உதித்ததம்மா

தாயே உன்னை எண்ணி
மனம் உருகி பாடுகையில்
ஞானம் பொறக்குதம்மா
மனதினில் ஞானம் பொறக்குதம்மா...

பெற்ற பிள்ளையை
பாச்சப் பட்டினி இடுவது
தாயின் செயல் அல்லவே
நல்லதொரு தாயின் செயல் அல்லவே

ஒரு தவறும் செய்யாத
குற்றம் இலைக்காத
மானிடரைக் காணல் எளிதல்லவே
இங்கு காணல் எளிதல்லவே ...

என் பாவக்கணக்கை
பட்டியல் போட்டால்
நெஞ்சம் பதறுதம்மா
சொல்ல நா குழறுதம்மா
முன்ன நான் செய்த
வினையோ இந்த
ஜென்மம் எடுத்ததம்மா
எண்ணுகையில்
அச்சம் பிறக்குதம்மா
செய்த பாவம் இன்னும்
மிச்சம் இருக்குதாமா ??
கண்ணீரில் என் நாட்கள்
கரையுதம்மா
என் வாழ்வின் நாட்கள்
கரையுதம்மா

என்றும் .....என்றென்றும்
ஜீவன்

எழுதியவர் : ஜீவன்.. (25-Nov-17, 4:37 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 208

மேலே