மனிதம்

மனிதன்...
வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறான்.
மனிதம்...
எங்கே என்று தான் தெரியவில்லை...

பறவைகள்...
சுற்றி திரிந்துக்கொண்டு தான் இருக்கிறது.
காடுகள்...
எங்கே என்று தான் தெரியவில்லை...

தொண்டன்...
பிறந்து கொண்டே தான் இருக்கிறான்.
சீறிய தலைவன்...
எங்கே என்று தான் தெரியவில்லை...

நிலவு...
காய்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
ரசிக்க...நேரமில்லாமல்
மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்...

சித்தாந்தம்...
பேசப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
செயல்வீரன்...
எங்கே என்று தான் தெரியவில்லை...

எழுதியவர் : புகழ்விழி (2-Dec-17, 8:08 pm)
Tanglish : manitham
பார்வை : 144

மேலே