சட்டம் யார் கையில்
சட்டம் யார் கையில்?
பணம் கொண்டவன் அவன் கையில்.
குற்றம் குறைய இயற்றிய சட்டம்.
இன்றோ, குற்றவாளியின் கையில்.
காமப்பசி தீர, சிறுப் பிள்ளையை கொன்றவன் சிறையில் இல்லையே.
நிதி இல்லாமல் நியாயம் கேட்டால், இன்றோ நீதி இல்லையே.
கோடி, கோடியாய் கொள்ளையடிப்பது குற்றம் இல்லையே.
அநீதி வென்று, நீதி தோற்றால், நல்ல சட்டம் இருந்தும் பயனில்லையே.
நல்ல மனிதர்கள், இயற்றிய சட்டம், இன்றோ நல்லவனுக்கில்லையே.
அதிகாரம் கொண்ட அரக்கர்கள் இருக்கும் வரை, நியாயம் வெல்லப் போவதில்லையே.
சட்டம் யார் கையில்?
பணம் கொண்டவன் அவன் கையில்.
குற்றம் குறைய இயற்றிய சட்டம்.
இன்றோ, குற்றவாளியின் கையில்.