சட்டம் யார் கையில்

ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக வாக்களிப்பதில் ,
ஏற்றத்தாழ்வில்லா கல்வி வழங்குவதில்,
வரதட்சணை இல்லாத சமூகம் உண்டாக்குவதில் ,
இனப்பாகுபாடு பாராமல் சமவாய்ப்பு அளிப்பதில் ,
பெண்களுக்குண்டான சமஉரிமை வழங்குவதில் ,
வாகன பயணத்தில் தலைக்கவசம் அணிவதில் ,
போக்குவரத்துக்கு சமிக்கை மதித்து சாலைகளில் செல்வதில் ,
சுகாதார முறையில் கழிப்பறை பயன்படுத்துவதில் ,
பயன்படுத்திய பொருள்களை குப்பைகளில் போடுவதில் ,
நேர்மையான வழியில் அரசு ஆவணங்களை பெறுவதில் ,
ஈட்டிய வருமானத்தை முறையாக கணக்கு காட்டுவதில்,
இவ்வகையில் மக்களின் கைகளிலும்,
அரசின் கண்காணிப்பிலும் உள்ளது
"சட்டம் "

எழுதியவர் : (27-Dec-17, 6:29 pm)
சேர்த்தது : வினோத்
பார்வை : 68

மேலே