முட்கள்
முட்களின் வழியைக் கடந்த பிறகு
நிலவைத் தொடட்டும் உந்தன் சிறகு
கற்கள் உன்னைக் கிழிக்கும் போதும்
பொறுத்துக் கொண்டால் ஜெயமே சேரும்
எடுத்த செயலை முடிக்கும் வேளை
இடர்கள் தொடர்ந்து கொடுக்கும் கவலை
தடுக்கும் நிலைகள் தாண்டி விட்டால்
மிடுக்கும் படிக்காய் வெற்றி கிட்டும்
விழுது தாங்கும் ஆல மரமாய்
பொழுதும் உலகைத் தாங்கப் பிறந்தோம்
அழுது என்ன ஆவது இங்கே
எழுது உனக்கான வரிகளை நீயே..
கூர் முள்ளுக்கும் பயத்தை வரவை
பார்வை பார்த்தே துரத்தி விடுவாய்
ஏர் கொண்டுழுகும் உழவனைப் போல
வீரம் கொண்டு துன்பம் கலைப்போம்