இரட்டைக் கிளவி
![](https://eluthu.com/images/loading.gif)
தலையதலைய பட்டுடுத்தி
வெடுவெடுன்னு போறவளே
படபடன்னு பேசும் போது
சறுகாக வெந்தேனடி..
துருதுருன்னு கண்ணால
மாஞ்சிமாஞ்சி பார்த்தவளே
மளமளன்னு கோவிக்கும் போது
மச்சான் மனம் நொந்ததடி..
மொழுமொழுன்னு கால்மேல
கலகலன்னு கால் கொலுசும்
பளபளன்னு மின்னும் போது
பாவி உள்ளம் ஏங்குதடி..