குகனின் குரல் -------------------பொன் குலேந்திரன் – கனடா

குகநாதன் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவன் . மேலும் ஒலி அலையில் ஆராய்ச்சி செய்து புதுமையாக எதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் திருநெல்வேலி கோவில்பட்டி கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில்பிறந்தவன் .பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் . அவர்கள் குடும்பத்தில் குகன் மூத்தவன் அவனுக்கு அடுத்ததாக ரேணுகா, ரேவதி எனற இரு சகோதரிகள் கலியாண வயதை எட்டி பார்த்துகொண்டு இருந்தனர் . அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு குகனுக்குண்டு..

பல வேலைகளுக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைகளுக்கு போய் ஏமாற்றத்தோடு திரும்பியது அவன் மனதில் விரக்தியை உருவாக்கியது. யாரோடு அவன் தன் கவலைக்கிடமான நிலையை சொல்லி பேசுவது . அவனின் ஒன்றாக படித்த அவனின் நெருங்கிய நீண்ட கால நண்பன் கேசவனை தவிர வேறு ஒருவரும் அவனின் சிந்தனைக்கு எட்டவில்லை கேசவனிடம் குகன் தன் ஆதங்கத்தை குகன் சொன்னான்

“ கேசவா நான் முதல் வகுப்பில் பட்டம் பெற்று ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல வேலைகளுக்கு விண்ணப்பித்து ஒன்றும் கிடைக்கவில்லை. எனக்கு என் இரு சகோதரிகளின் திருமணப் பொறுப்புண்டு.

“ அது எனக்கு தெரியும் குகன்.”

“ எனது இரு பெற்றோர்கள் இன்னும் சில மாதங்களில் ரிட்டையராகி விடுவார்கள்”
“அதுவும் எனக்குத் தெரியும்”

“நான் வேலைக்கு விண்ணப்பித்து நான்கு இடங்களுக்கு இண்டர்வியூவுக்கு போய் வந்தேன்

“ என்ன முடிவு “
“ஏமாற்றம் தான்”
‘”ஏன் குகன் உனக்கு தேவையான கல்வி தராதரமும் தோற்றமும் இருக்கிறதே. ஏன் அவர்கள் உன்னை தேர்வு செய்யவில்லை? என்ன வேலைக்கு விண்ணப்பித்தாய். ”

“வாடிக்கையாளர் சேவை பகுதிக்கு”
“ அப்போ நீ வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ளும் போது அவர்களைக் கவரும் விதத்தில் பேசும் திறமை உனக்கு இருக்கவேண்டுமே”?

“அங்குதான் பிரச்சனை எனக்கு. அதை தான் நீர்முகப்பரீட்சை நடத்திய குழுவின் தலைவர் குறிபிட்டு சொன்னார் “

“என்ன சொன்னார் “

“எனக்கு வாசிக்க ஒரு செய்தி பத்திரிகையை தந்து வாசிக்க சொன்னார். கேள்விகள் கேட்டார் . நான் பேசிய குரல் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை என்பது அவர்களின் சிரிப்பில் இருந்து அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை எனக்குத் தெரிந்தது”

“ இப்போ புரிகிறது”

“ என்ன’ சொல்லு. என்னில் என்ன குறை இருக்கிறது ?
“எல்லாம் உன் குரலில் உள்ள பிரச்சனை தான் . நீ பேசும் போது சில சமயம் உன்னை அறியாமலே பல குரல்களில் பேசுகிறாய். நீ பேசும் தொனி உன்னையறியாமலே மாறுகிறது அதை நான் கவனித்தேன் . நான் அதை உனக்கு சொன்னால் நீ எங்கே கோபப்டுவாயோ என்று யோசித்து அதை உனக்கு நான் சொல்லவில்லை”

“ கேசவா நான் வேண்டும் என்று அப்படி பேசுவதுகிடையாது நான் பேசும் போது என்னையறியாமலே என் குரல் மாறுகிறது நான் என்ன செய்ய முடியும்”?

“ நீ போய் இந்த பிரச்சனையை காது. மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஸ்வர0னிடம் காட்டினால் என்ன? . இதை தள்ளிப். போடதே . டாக்டரின் செலவை பற்றி யோசக்காதே அதை நான் பார்துக்கொள்கிறேன் “ கேசவன் சொன்னான்.

****

டாக்டர் மகேஸ்வரன் குகனைப் பரிசசோதித்து விட்டு சொன்னார்

‘‘குகன் . தொண்டைக்குள் இருக்கும் குரல் பெட்டி (voice box) மூலம்தான் நாம் பேசுகிறோம்.
V வடிவத்தில் இருக்கும் குரல் பெட்டியானது சுவாசிக்கும்போது திறந்த நிலையிலும் பேசும்போது மூடியும் இருக்கும்.

“பேசும் பொது ஏன் என் குரல் மாறுகிறது டாக்டர்”?



“பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென குரல் மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வேகமாக பேசிக்கொண்டிருக்கும்போதே சுவாசிக்க நேரும்போது குரல் மாறும். சளிப்பிரச்னை காரணமாகவும் குரல் மாறும். வாயில் மூச்சு விடும்போது தொண்டை காய்ந்துவிடும். அப்போது அதை ஈரமாக்குவதற்காக சளி உற்பத்தியாவதாலும் குரல் மாறலாம். சில நேரம் ஆண் , பெண் குரலில் பேசலாம்”



“நான் சில் சமயம் கத்தி பேசுவதுண்டு அப்போது என் குரல் மாறுகிறது டாக்டர் “

“அதிகம் கத்துவது குரல் பெட்டியை பாதிக்கும். செரிமானப் பிரச்னை காரணமான ஏப்பம், வாயுத்தொந்தரவாலும் குரல் மாறும். எல்லாவற்றையும்போல் குரல் பெட்டியையும் முறை யாகப் பராமரிக்க வேண்டும். மூக்கின் வழியாகத்தான் சுவாசிக்க வேண்டுமே தவிர வாய் வழியாக சுவாசிக்கக்கூடாது. அதிக ஒலி அளவிலும் பேசக் கூடாது மிகக்குறைந்த ஒலி அளவிலும் பேசக் கூடாது”. டாக்டர் மகேஸ்வரன் சொன்னார்



“ என் குரலை பாதுகாக்க நான் என்ன டாகடர் செய்யவேண்டும்”?


“வெந்நீரில் வாரம் ஒருமுறை ஆவிபிடிப்பது குரல் பெட்டிக்கு நல்லது. குரல் மாற்றம் என்பது பிரச்னையாகவே மாறி விட்டால் மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை மற்றும் ஸ்பீச் தெரபி ஆகியவற்றின் மூலம் சரி செய்யலாம்.. அதுக்கு அதிகம் செலவாகும்’’

“இந்த குரல் குறைபாட்டினால் எனக்கு வேலை கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது டாக்டர்:

“ அப்படி சொல்லவேண்டாம். குள்ளர்கள் கூட நடிகர்களாகி பணம் சம்பாதித்திருக்கிறார்கள் நடிகர்கள் தவக்களை குள்ளமணி பற்றி அறிந்திருப்பீரே . கருப்பாக ஒல்லியாக இருபவர்கள் கூட சில சமயம் நடிகர்ளாகி இருக்கிறார்கள் . வித்தியாசமான குரலில், வேறோர் இடத்தில் இருந்து குரல் வருவது போன்று பொம்மையை வைத்து பேசுவது ஒரு கலை. அந்த கலையை பாவித்து பொழுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி நல்ல வருமானம் தேடி இருகிறார்கள் சிலர் இதை “பிறிதிடக் குரற்பாங்கு” கலை என்பர் ஆங்கிலத்தில் ventriloquism என்பர் . இது அடி வயிற்றில் இருந்து பேசும் கலையாகும்.

“கேட்க எனக்கு புதுமையாக இருக்கு டாக்டர் “

“ என்ன குகன் கமல்ஹாசன் நடித்த அவர்கள் படம் நீர் பார்க்கவில்லலையா? அதை முதலில் போய் பாரும் அப்போ உமக்கு புரியும்” டாக்டர் சொன்னார்



“சரி நிச்சயம் பார்க்கிறேன். நான் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கும் வழியை காட்டி விட்டீர்கள் டாக்டர்”

“கொஞ்சம் பொறு. நீர் வால்ட் டிஸ்னி கார்டூன் படம் பார்த்தாயா?



“பார்த்திருக்கிறேன். எனக்கு டாம் அண்ட் ஜெரி . மிக்கி மவுஸ் பாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும்”

“அங்குதான் இருக்கிறது உனது மாறும் குரல்மாற்றி பேசும் வல்லமை;. உனது திறமை அவர்களுக்கு பயன் படலாம். அவர்களோடு தொடர்பு கொள்.ளும் . உமக்கு கு சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு. மேசையில் இருந்து கணனியை பாவித்து செய்வது தான் வேலை என்று நினைக்கவேண்டாம். உன்னுள் உள்ள . திறமையை பொருத்தமான வழியில் நீ பாவித்து பணம் சம்பாதித்து உன் சகோதரிகளின் திருமணத்தை செய்து வைக்கலாம். “

“மிகவும் நன்றி டாக்டர்உங்களின் ஆலோசனைக்கு ;. இரண்டு வழிகளையும் நான் முயற்சிக்கிறேன்”

****

சில மாதங்களுக்கு பின் டாக்டர் மகேஸ்வரன் குகனை சந்தித்தபோது

“ என்ன குகன் எப்படி போகிறது உமது வேலை தேடும் படலம் நான் சொன்ன ஆலோசனை ஏதும் உதவியதா ?

“ டாக்டர் உங்கள் ஆலோசனை பெரிதும் உதவியது. பொழுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு பெரிய நிறுவனம் ஒன்று தனது நிகழ்சிகளில்

பங்குகொள்ள கலைஞர்களை கேட்டு விளம்பரம் செய்திருந்தனர் . நான் விண்ணப்பித்து இன்டர்வியூவுக்கு போனபோது, நான் குரல் மாறி பேசுவதை பார்த்து என்னால் பொம்மையை இயக்கி, வேறு குரலிலும் என் குரலிலும் பேச முடியுமா என்று கேட்டார்கள். நான் முடியும் ஆனால் அவர்கள் எனக்கு அந்த கலையில் பயிற்சி தந்தால் பெருதும் உதவும் என்றேன் .

“ அவர்கள் என்ன சொன்னார்கள் “?

“அதற்கு தேவையான பயிற்சி தருவதாக் சொல்லி என்னை தேர்ந்து எடுத்தார்கள். இப்போ நான் ஒரு இரு குரல்களில். பொம்மையும் நானும் பேசுவது போல் பேசி மக்களை மகிழ்விக்கும் பட்டதாரி கலைஞன். எனக்கு அது மிகவும் பிடித்த வேலை .நல்ல சம்பளம் தருகிறார்கள் அதே நேரம் ஒரு பிரபல சினிமா பட இயக்குனர் என் நிகழ்சிகளை பார்த்தபின் . தான் தயாரிக்க இருக்கும் புராணக் கதை கார்ட்டூன் படம் ஒன்றுக்கு எனக்கு குரல் டப்பிங் கொடுக்க விருப்பமா என்று கேட்டர . 50.000 தருவதாக் சொன்னார்”


“ அவருக்கு நீர்; சொன்ன பதில் என்ன ?



“நான் சம்மதித்து ஒப்பந்ததில் கையெழுத்து வைத்து விட்டேன் டாகடர் . “


“நாள் முடிவு குகன். பல பட்னகளில் உமக்கு குரல் டப்பிங் கொடுக்க உமக்கு சந்தர்ப்பங்கள் பல கிடைக்கலாம். தமிழ் சினிமாவில் நடிக்கும் சிலர், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தமிழ் சரியாக உச்சரித்து பேச வராது. பேசினாலும் இயக்குனருக்கு திருப்தியாக இருக்காது அதனால் பல படங்களில் குரல் டப்பிங் கொடுக்க சந்தர்பங்கள் வரும்”
“ என் காலம் நல்லதாக இருந்தால் எல்லாம் எதிர்பார்த்தபடி நடக்கும் டாக்டர் “
“ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கடவுள் தந்த உமது குரலை கவனித்து கொள்ளும் . உமது குரல் தான் உமது பொக்கிஷம என்பதை மறந்து விடாதையும் . ஒன்று மட்டும் சொல்லுறன். பணம் வந்தால் உமது பழைய நிலையை மறந்து. கர்வம் வந்துவிடும் .நண்பர்கள் கூடி, பழக்கங்கள் .மாறி , மது . மாது , சிகரெட் பாவிக்கத் தொடங்குவீர் அவைற்றை நினைத்தும் பார்க்க வேண்டாம் . நீர் உண்ணும் உணவில் அதிக கவனம் எடும், அப்போது தான் குரல் என்ற உமது பொக்கிஷம் காக்கப்படும்” டாக்டர் மகேஸ்வரன் சொன்னார்

*****

எழுதியவர் : (29-Dec-17, 10:00 am)
பார்வை : 74

மேலே