சட்டம் யார் கையில்
இயல் இயலாய் பிரிப்போம்
அரசியல் சட்டம் படிப்போம்
கூட்டம் கூடிப் பேசும்
குடிமக்கள் கையிலும் சட்டம்
ஆட்டம் ஆடி அசத்தும்
அழகிகள் கையிலும் சட்டம்
பட்டம்பெற்று வேலையற்று வாழும்
பட்டதாரிக் கையிலும் சட்டம்
மேடை மேடையாய்ப் பேசும்
அரசியல்மேதை கையிலும் சட்டம்
சட்டம் ஒரு இயந்திரம்
ஆனால் இயக்கத்தெரியா இயந்திரம்
கையில் எடுத்து இயக்கினால்
அநியாயம் தடுத்து நிறுத்தலாம்
அண்ணல் பொறித்த சட்டமடா
அன்னப்பறவை போவ பறக்கதடா
பறந்து போகும் சட்டத்தை நீ
தொலைந்துவிடாமல் கையில் பிடி
கையிலுள்ள சட்டம் படி
அகிம்சை வழியில்யுத்தம் முடி
சட்டம் இருக்குக் கைக்கடிகாரமாய்
குற்றத்தை அடக்கு சட்டப்பூர்வமாய்
சட்டம் இருக்கு நம்கையில்
அதை பூட்டிவைக்காதே மௌனப்பையில்.
-முகிலன்.ம