சட்டம் யார் கையில் சட்டம் நீதி தேவனாம் இறைவன் கையில்

1, மெத்தப்படித்த மேதைகள் அமரந்து கூடித்தந்தனர் சட்டம்

2, குற்றம் புறிந்த பாவிகள் ஒழிய தேடித்தந்தனர்சட்டம்

3, நீதி தவறாது நியாயம் துளிர்விட பாேராடினர்அந்நாளில்

4, நிதி தந்தபின் நியாயம் அறியாது பாெருள் தேடுகிறார் இந்நாளில்

5, ஒற்றைக் காெலைக்கு மரண தண்டனை என்பது இங்கே சட்டம்

6, பல காெலை புறிந்தால் அதுவே தண்டனை என்பது எப்படி ஒட்டும்

7, குற்றம் புறிந்த கயவர் கூட்டம் வீசிடுவர் பணக்கட்டை

8, அதை நாய்பாேல் கவ்வ சில கூட்டமுண்டு யார் காத்திடுவர் இந்நாட்டை

9, நித்தம் அயராது நீதி காத்திடும் சில நல்ல உள்ளங்கள் உண்டு

10, சத்தம் இல்லாது அவரை மாய்த்திடும் அரசியல் சூழ்ச்சிகள் இங்கே உண்டு

11, பண பலம், படை பலம், அரசியல் பலத்தால் மனித சட்டத்தில் தப்பிக்க கூடும்

12, தண்டனை, நீதி தேவனாம் இறைவன் சட்டத்தில் சிறு துளியும் குறையாது சேரும்

13, இம்மையில் சட்டம் பல கை தவழ்ந்து ஆற்று நீர் பாேல ஓடும்

14, மறுமையில் சட்டம் ஆண்டவன் கையில் சிறிதும் பிறழாது வாழும்.

எழுதியவர் : Abdul Hameed (31-Dec-17, 8:10 pm)
சேர்த்தது : Abdul Hameed
பார்வை : 626

மேலே