புது நிலவுச்சித்திரம்
செம்பவளம் செதுக்கி
மரகதம் உரைத்தாெரு
சிலையா செதுக்கினேன்
தங்கத்தையும் உருக்கி
வைரத்தையும் நறுக்கி
சரியா செதுக்கினேன்
நீ வந்து நின்றாயே
என் பார்வை கொன்றாயே
பனிப் பூத்த புது மலராய்
தேன் தெளிக்க நின்றாயே
சிலையை வென்ற சித்திரமே
கானமயில் ஆடிவர
காட்டுக் குயில் பாடிவர
நீர் தெளிக்கும் வானம் அங்கு வெளுக்குதடி
பூங்குயிலே நீயும் பாட
புத்தம்புது தாளம் இட
இங்கிருக்கும் பூமி கொஞ்சம் சிலிர்க்குதடி
பூப்பூத்த பூவனமே
புத்துயிராய் கலந்தாயே
மாலையிடும் மாருதமே
மடி சேரும் மாங்குயிலே
பூவை வென்ற புது நிலவே
ஆழி கடல் பூத்து வந்த முத்தை சிலர் பார்த்ததுண்டு
நேசக்கடல் பூத்த முத்தை பார்த்ததில்லையே
கரு வானம் நீர் தெளித்த
மழை துளியாய் நீ விழுந்தாய்
பயிர் துளிர்க்கும் செந்நிலம் போல்
புதுசாக நான் சிலிர்த்தேன்
தேடி வந்த தேவதையே.