உயிர் வாழ முடியலடி
காதல் நிலவே
காதல் நிலவே
காதலே கான வந்துவிடு...
கண்ணீர் கடலில்
மூழ்கி தவிக்கிறேன்
கருணை கொலைதான் செய்துவிடு...
நம்மோடு வாழ்ந்த காதல்
நடுதெருவுல நிக்குதடி..!
நான் செய்த தப்புக்கு
அது என்ன பன்னுமடி..!
உன்னோடு இல்லா நாளில்
உலகம் என்னை வெறுக்குதடி..!
உள்ளத்தில் வழி சுமந்து
உயிர் வாழ முடியலடி..!
உன் நினைவின் பசிகளுக்கு
என் நிஜங்கள் இரையாகுதே..!
உன்னை நினைத்தை வாழ்வதினால்
என் நிழலும் சுமையாகுதே..!
உன் பிரிவின் கேள்விக்கு
என் பிழைகள் பதிலாகுதே..!
உன்னை பிரிந்தே வாழ்வதினால்
என் பிம்பம் தொலைகிறதே..!
கனவில் பயணம் செய்து
கடந்த காலத்தை தேடுகின்றேன்..!
கதிரவன் உதித்த பின்பு
கண்ணீரில் குளிக்கின்றேன்..!
கவலையே காட்சி செய்ய
கவி வரிகள் எழுதுகின்றேன்..!
கல்லறையில் அதை வைக்க
கடவுளே வேண்டுகின்றேன்..!
காதல் நிலவே காதல் நிலவே
காதலே கான வந்துவிடு..!
கண்ணீர் கடலில் மூழ்கி தவிக்கிறேன்
கருணை கொலைதான் செய்துவிடு..!