தைத்திருநாள் வாழ்த்துக்கள்

வியர்வையை விருந்தாகும் விவசாய சொந்தங்களே
விண்ணாளும் அரசனும் உன்னால் வாழ்கிறான்
சுட்டேரிக்கும் சூரியனோடு கைகோர்த்து
சுற்றி வந்த கால்நடையோடு
கால் வயிறு கஞ்சி குடித்து
காணி நிலமதை உழுது
பருவத்தே விதை விதைத்து
பார்த்திருந்து களை எடுத்து
அளவாய் மழை பொழிய
அயராது இறை வேண்டி
வளர்ந்ததை ஆடு மாடு திங்காம
வந்ததில் கடவுளுக்கு படியளந்து
மீண்டும் மண்ணில் விதைக்க ஒதுக்கிவைத்து
மீதமுள்ளதை விற்று வீடு வந்து
பெண்டாட்டி நகையில் கொஞ்சம் மீட்டு
பெற்ற பெண்டிர்க்கு பட்டெடுத்து
பிள்ளைகள் விரும்பியதை பெற்று கொடுத்து
பிள்ளையாய் பாவித்த கோ அதைமறவாமல்
பருத்திக்கொட்டை, பழம், புண்ணாக்கொடு
பல வண்ணங்களில் அலங்காரம் செய்து
பருத்தி வேட்டியில் மிடுக்காய் நடந்து
பழையன கழித்து புதியன புகுந்து
உறவுகள் கூட திருவிழா நடத்தி
உறியடித்து ஏர் தழுவிட
ஒற்றுமை ஓங்கிட அனைவரும்
ஒன்றினைந்து படையலிட்டு
மாவிலை தோரணம் கட்டி
மாகோலம் வீடலங்கரிக்க
கோ பூஜை சிறப்பாக செய்து
கோணவாழை தரையில் இட்டு
பருப்பு, நெய், பொரியல் கூட்டோடு
பச்சரிசி பால் பொங்கி
பக்குவமாய் வெல்லம் சேர்த்து
முந்திரி திராட்சையை தெளித்துவிட்டு
அறுசுவை விருந்து படைத்து
ஆதவனுக்கு நன்றி கூறி
மாடு கன்னிற்கு மரியாதையை செய்து
பால் பொங்கி புதுப்பானை வழிந்தோட
புது மஞ்சள் கொத்தோடு
தித்திக்கும் கரும்பின் சுவை கூட்டி
வந்தவர்க்கும் விருந்தோம்ப
படையலிட்டு
இன்பம் போங்க மகிழ்ச்சி தங்க
வளங்கள் போங்க ஒற்றுமை ஓங்க
செல்வம் போங்க ஆரோக்கியம் மேம்பட
அன்பு போங்க நட்பு நிலைத்திட
வேளாண் சிறக்க விவசாயி மகிழ்ந்திட
இல்லம் சிறக்க நாடு உயர்ந்திட
வற்றாத நதிகள் வடியாத நீர் நிலைகள்
வயல் எங்கும் பசுமை பூத்திட
வளங்கள் பெருக்கும் ரம்மிய
தைத் திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (14-Jan-18, 1:01 pm)
பார்வை : 145

மேலே