சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 39 நம்மி வச்சிந நந்நு - கல்யாணி ராகம்

தியாகராஜ ஸ்வாமிகள் கோவூர் ஈஸ்வரன் சுந்தரேசுவரனைக் குறித்துப் பாடிய ஐந்து கீர்த்தனைகளுள் ஒன்று.

பொருளுரை:

உன்னையே நம்பி வந்தடைந்த என்னை அன்பு கூர்ந்து காத்தருள். ‘இதோ பெற்றுக் கொள்’ என்று வரங்களை அருளும் கோவூர் வாழ் சுந்தரேசப் பெருமானே!

வேதம், புராணங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள் முதலியன ஒன்று கூடி (த்தேடியும்) உன் சரணார விந்தங்களைக் காண முடியாமல் உன்னைக் கெஞ்சி இரந்தன;

நாதமே உருவானவனே! சௌந்தரிய நாயகி அம்மனின் கேள்வனே! மத வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட வாதங்களுக்குப் புறம்பானவனே! தியாகராஜனுக்கு வரமளிப்பவனே! சுந்தரேச!

பாடல்:

பல்லவி:

நம்மி வச்சிந நந்நு
நயமுக ப் ரோவவே நிநு (நம்)

அநுபல்லவி:

கொம்மநி வரமுல நொஸகே
கோவூரி ஸுந்த ரேச (நம்)

சரணம்:

வேத புராணக ம சாஸ்த்ராது லு கு மிகூ டி
பாத முலநு க நஜாலக ப திமாலி வேட
நாத ரூப ஸ்ரீ சௌந்த ர்ய *நாயகீபதே பே த
வாத ரஹித த்யாக ராஜ வரத ஸுந்த ரேச்வர நிநு (நம்)

*நாயகீப மதபே த

யு ட்யூபில் Kunnakudi Balamurali Krishna - Nammi Vacchina - Kalyani - Tyagaraja என்று பதிந்து குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் NAMO with Chitravina N Ravikiran in Cleveland (Nammi Vacchina/Kalyani) என்று பதிந்து சித்ரவீணை N.ரவிகிரண் தலைமையில் நம்மி வச்சிந நந்நு பாடலைப் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-18, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே