சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 41 முத் து மோமு ஏலாகு செலங்கெ நோ – ஸூர்யகாந்தம்

பொருளுரை:

இராமனின் சுந்தரத் திருமுகம் எவ்வாறு விளங்குமோ? (வனத்தில்) முனிவர்கள் அதை எப்படிக் கண்டு மோகித்தனரோ?

‘தெய்வம் உண்டு‘ என்று நெடுங்காலம் உள்ளம் கரைந்து, கரைந்து நிற்பவரின் எதிரில் (திருமுகம் எவ்வாறு விளங்குமோ?)

தூய மனங்கொண்ட அந்தணரின் ஆசீர்வாத பலமோ? நான் செய்த பூசையின் பயனோ? முன்னாள் தவப்பயனோ? அல்லது அந்த மேக வண்ணனின் பிறவிக் குணமோ? குபேரனின் தோழனாகிய சிவனால் துதிக்கப்படுபவனின் (திருமுகம் எவ்வாறு விளங்குமோ?)

பாடல்:

பல்லவி:

முத் து மோமு ஏலாகு செலங்கெ நோ
முநுலெட்ல கநி மோஹிஞ்சிரோ (மு)

அநுபல்லவி:

கத் த நுசு ஜிரகாலமு ஹ்ருத யமு
கரகி கரகி நில்சுவாரிகெது ட ராமுநி (மு)

சரணம்:

மநஸு நிர்மலமகு பூ ஸுர க்ருதமோ
மஞ்சி பூஜாப லமோ தொலுதடி தபமொ
க நநிப தேஹூநி ஜநநஸ்வபா வமொ
த நபதி ஸகு டை ந த்யாக ராஜார்ச்சிதுநி (மு)

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் இனிமை சொட்டும் குரலில் தியாகராஜரின் சூர்யகாந்தம் ராகப் பாடலான `முத்துமோமு’ பாடியதை சிறப்பித்து ஆனந்த விகடன் சரிகமபதநி டைரியில் சொல்லப்பட்டிருந்தது.

முக்கியமாக, உதடுகளை மூடிய நிலையில் அங்கங்கே இவர் ராகத்தை `ஹம்’ செய்தது அழகு!

என் குறிப்பு: ஸ்ரீரஞ்சனியின் கச்சேரியைக் கேட்கவும் பார்க்கவும் இல்லையே என்று வருத்தம்.

யு ட்யூபில் Tiger Varadachariar -Muddumomu -Ragam Suryakantham என்று பதிந்து டைகர் வரதாச்சாரியார் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Dr.M.Balamuralikrishna-01-muddumOmu ElAgu celangEnO-sUryakAntam என்று பதிந்து Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Madurai GS Mani 01 Muddhu momu Suryakantham T என்று பதிந்து மதுரை G.S.மணி பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-18, 8:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே