சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 43 கநுகொ ண்டிநி ஸ்ரீராமுநி நேடு – பிலஹரி

பொருளுரை:

ஸ்ரீராமசந்திர மூர்த்தியை நான் இன்று கண்டு கொண்டேன். சீரிய குலத்தில் இனிது அவதரித்து இப்பூவுலகில் சீதையைக் கைப்பிடித்த (ஸ்ரீராமனைக் கண்டு கொண்டேன்)

பரதன், லக்ஷ்மணன், சத்துருக்கினன் ஆகிய தம்பியர் சேவிக்கவும், வாயு தனயன் திருவடிகளைப் பற்றவும், தீரரான சுக்கிரீவன் முதலிய மகானுபாவர்கள் துதிக்கவும் எழுந்தருளியிருக்கும் தியாகராஜனின் இஷ்ட தெய்வத்தை (இன்று கண்டு கொண்டேன்)

பாடல்:

பல்லவி:

கநுகொ ண்டிநி ஸ்ரீராமுநி நேடு (கநு)

அநுபல்லவி:

1இநகுலமந்து இம்புகா நு பு ட்டி
இலலோந ஸீ தா நாயகுநி நேடு (கநு)

சரணம்:

ப ரத லக்ஷ்மண ச த்ருக் நுல கொலுவ
ப வமாந ஸுதுடு பாத முல ப ட்ட
தீருலைந ஸுக் ரீவ ப்ரமுகு லு
வி நுதிஸேய த்யாக ராஜநுதுநி நேடு (கநு)

1இநவம்சமுந

யு ட்யூபில் Thyagaraja Kriti-Kanu Gontini-Bilahari-TN Seshagopalan என்று பதிந்து TN.சேஷகோபாலன் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-18, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 101

மேலே