உனக்காக நான் எனக்காக

விழி மூடி உறங்கும் போது கனவில் வந்தாய்
விழி திறந்து இருக்கும் போது நினைவில் வந்தாய்.......
இமைக்காமல் உனக்காக நானோ காத்திருந்தேன்
பார்க்காமல் நீயோ என்னை கடந்து போனாய்..........
பாராமல் கடந்து போனாய் என்று நினைத்தேன்
பார்த்தே தான் கடந்து போனாய் இன்று உணர்ந்தேன்........
நினைவாக உன்னை நான் நினைந்தேன் அன்று
கனவாக இன்று நீ கலைந்தே போனாய்..........

எழுதியவர் : Mahi (22-Jan-18, 9:36 pm)
பார்வை : 461

மேலே