தேடல்

அன்பே என் விடியல்கள் அனைத்தும்
உன்னை தேடும் தேடல்களிலே கழிக்கின்றன..
கண்ணெதிரே உன்னை காண முடியாமல்
தினம் கண்ணீரில் கரைக்கிறேன்..
தினம் உன்னிடம் உதிர்க்க நினைத்து
நான் சேர்த்து வைக்கும் வார்த்தைகள் அனைத்தும்
தினம் வரிகளாக படைக்கிறேன்...
இமயம் கூட தொலைவாக தெரியவில்லை.
ஆனால் உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளியை அழக்க
அளவுகோல் கிடைக்குமா என்றும்
கூட தெரியவில்லை
இருந்தும் உன்னை தேடுகிறேன்
நமக்குள் இருக்கும் இந்த இடைவெளி குறைந்து
என்றாவது உன்னை
சந்தித்து விடுவேன் என்ற நப்பாசையில்....
தொடரும் என் தேடல்...

எழுதியவர் : அனிதா (30-Jan-18, 1:38 pm)
Tanglish : thedal
பார்வை : 265

மேலே