அவளழகு

என்னவள் இதழ் விரிப்பின்
பூவிதழ்கள் எல்லாம்
வியப்பின் உச்சியில்யாழ...!

அவள் உச்சியின் வாசம்
முகர்கையில் வாசம்
வீசும் அவை எல்லாம்
சுயமிழந்து நிற்க....!

அவள் முக அழகில்
முழுமதியும் மதி
இழந்து வளர்வதும் தேய்வதுமாக
நிலையில் இருந்து திரிந்து
போனான்......!

பாதக் கொலுசு ஒலிக்
கேட்டு கூவும்
குயிலினமும் குரல் எழுப்ப
தயக்கம் கொள்கின்றனவே...!

எழுதியவர் : விஷ்ணு (5-Feb-18, 7:55 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 103

மேலே