விடுதி

விடுதி!
கல்லூரி வாழ்க்கையில
இதுதான் எங்க சன்னிதி!
எந்தநாளும் ராத்திரில
விடுதியில தூக்கமில்ல...
வீட்ட விட்டுப் பிரிஞ்சு வந்த
துளிகூட ஏக்கமில்ல...
காரணம்...
அந்தத் தாக்கத்தையும்
எங்களுக்கு நட்பு என்றும்
தந்ததில்ல...

பொய்யோ! மெய்யோ!
காய்ச்சலுனு சொல்லிக்கிட்டுக்
கட்டிலில படுத்ததுண்டு..
கட்டடிச்சி ஹாஸ்டலுல
வெட்டியாகத் திரிந்ததுண்டு..

ஒத்த சட்ட பத்துப் பேரு
மாத்தி மாத்தி போட்டுக்குவோம்!
பத்து மணி வரையில் மட்டும்
காலையில தூங்கிடுவோம்!

வருசத்துல ஒரு தடவ
பொறந்தநாளு ஒன்னு வரும்...
அன்னக்கினு கூட்டுச் சேர
மரண பீதி சேர்ந்து வரும்!

சமையலற சாமானெல்லாம்
சக்திமானா பறந்து வரும்!
முட்டையுமே தக்காளியும்
மொத்தமாக விருந்து தரும்!

அமர்ந்த இடம் அசையாம
அசை போடும் நாளும் வரும்...
அன்று!
இதையெல்லாம் எண்ணிப் பார்த்தா
இதய விழியில் நீரும் வரும்...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (6-Feb-18, 7:46 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : viduthai
பார்வை : 571

மேலே