என்னவள்

உந்தன் அழகோடு இணைந்து
என் மனதை கொள்ளைக்கொள்ள
உந்தன் ஒளிரும் திங்கள் முகமிருக்க
காவியங்கள் பேசும் உந்தன்
காந்த விழிப் பார்வை இருக்க
சிற்றிடையாளே ஆடிவரும்
சின்ன அருவிமகளென்ன நீ
ஆடிவரும் போது உந்தன்
கால்கள் கொலுசு இசைக்க
உதிரும் வெண்முத்து பரல்கள்போல்
உந்தன் சின்ன சிரிப்பு இருக்க
நீ அணிந்த ஆபரணங்கள் அத்தனையும்
உன் அழகில் மயங்கி ஒளிராமல் இருக்க
அவ்வொளி அத்தனையும் தாங்கி ஒளிரும்
உன் புன்னகையில் இருந்ததை கண்டுகொண்டேனடி
உன்னவன் நான் எந்தன் காதல் பொக்கிஷமே
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Feb-18, 8:18 am)
Tanglish : ennaval
பார்வை : 139

மேலே