யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
என் பெயர் பாலமுருகன்(பாபு),
கருமத்தம்பட்டி,கோவை.
எனக்கு முதுகு தண்டு கழுத்து பகுதியில் C4,C5,C6 பாகத்தில்
தேய்மானம் ஏற்பட்டு இரண்டு வருடங்களாக தாங்க முடியா வலியால் அவதிப்பட்டு வந்தேன்.
MRI scanமுடிவுகள் அறுவை சிகிச்சை
உறுதி செய்தது;ஒரு மருத்துவர் அல்லாது ஐந்தாறு மருத்துவர்களும்
அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறிவிட்டனர்.
சிகிச்சை முடிவின் பலன்கள் சிறப்பாக இருக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது என்றும் ,எதுவும் நேரலாம். அல்லது முழுமையாக குணமடையலாம்;
உங்கள் மன உறுதியும், கடவுள் அருளுமே உதவி என்று கூறி விட்டனர்.வலி அவதியால் கழுத்து
ஒரு புறம் சாய்ந்து, அடுத்தவர் முன்
அவமானப் பட்டு நடமாட முடியாது,
தற்கொலை செய்து கொள்ளலாம்
என்று கூட நினைத்ததுண்டு!
மனதில் தைரியம் கொண்டு
சென்னை அரசு சிறப்பு மருத்துவ
மனையில் அறுவை சிகிச்சை செய்து
கொள்ள சேர்ந்து விட்டேன்.
இனி வருவது தான் இக் கட்டுரை
எழுதுவதன் சாரமே!அறுவை சிகிச்சைக்கு என் உடலை தயார் செய்து கொண்டிருந்த இடைவேளை
நாட்களில் இந்த மருத்துவ மனையில் இருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவில் ஆலோசனைக்கு சென்றேன்/இங்கு நடந்தது என் வாழ்வில் ஒரு திருப்பம்! அங்கு இருந்த மருத்துவர், அறுவை சிகிச்சை வேண்டாம், எங்கள் மருத்துவ மனையில் சேர்ந்து
கொள்ளுங்கள், சரி செய்து விடுகிறோம், அவ்வாறு சரி ஆகா விட்டால் அறுவைசிகிச்சை பற்றி
யோசனை செய்யலாம், என்று கூறினார். இந்நிலையில் எனக்கு
அறுவை சிகிச்சை நாள் தள்ளி போனது.நானும்dischargeஆகி
கோவை வந்து விட்டேன். அதன் பின்
சென்னை வந்து அரும்பாக்கம்
அண்ணா இந்திய மருத்துவ மனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி சிகிச்சை பிரிவில்
சேர்ந்தேன், அங்கு, காலை மாலை
யோகா பயிற்சி, இயற்கை உணவு,
தனி மருத்துவர் மூலம் சிறப்பான
கவனிப்பு என எனக்கு அளித்த சிகிச்சை மூலம் இன்று நான் புது
மனிதன் ஆகி, இருபது வயது போல சுறுசுறுப்பாக இருக்கிறேன்!
ஒரு ரூபாய் கூட செலவின்றி இந்த அரசு மருத்துவமனையில் நம்மை
நோயாளிகள் போல பார்க்காமல்
நண்பர்களாக,குழந்தைகளாக
பார்த்து கொள்கிறார்கள். நீராவி
குளியல், களிமண் குளியல், வாழை
இலை குளியல், எண்ணெய் தேய்த்தல் போன்றவற்றை கர்ம
சிரத்தையுடன் கனிவாக செய்கின்றனர்!ஆரோக்கியமான
காய்கறிகள் ,காய் கனிச்சாறுகள்
நேரம் தவறாமல் நமக்கு தருகிறார்கள்!மன அழுத்தம் குறைந்து, உடல்வலி குறைந்து
முழு உத்வேகம் பெற்று வீடு திரும்பி
வரலாம். பல நோய்கள் இங்கு
மருந்து இல்லாமல் சரி செய்யப்
படுகிறது!மருத்துவர்கள் கடவுளுக்கு
நிகரானவர்கள் என்பது இங்கே
கண் கூடாக நிரூபணம் ஆகிறது.
ஒரு முறை சென்று மறுமுறை
செல்லத் தேவையில்லா நலம் பெற்று வாருங்கள்! ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை அழையுங்கள்.ph.8015250182
நலம் பெற வாழ்த்துக்கள்🍁🍁🍁🍁