பெண் உரிமை
பெண்கள் உரிமை நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம் வேறுபடும். அனேக பின்தங்கிய . பழமையில் ஊறிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். இது மரபு வழிவந்த கலாச்சாரமாகும். இந்தியாவில் உடன் கட்டை ஏறுதல், திருமணத்தின் போது ஆணுக்கு சீதனம் கொடுத்தல், விதைவைகள, திரும்பவும் திருமணம் செய்ய முடியாத கட்டுப்பாடு, வேலை வாய்ப்புகள் குறைவு போன்றவைகளுடன் வாழவேண்டிய நிலையில் பெண்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆண்கள் எத்தனை தடவையும் திருமணம் செயலாம் அனால் பெண்களுக்கு பல தடவை திருமணம் செய்ய கட்டுப்பாடு உண்டு. இத்தடைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் முழு உரிமைகளும் கிடையாது பெண்கள் வாழ்கிறார்கள். இக்காரணங்களால் தமிழ் நாட்டில் பெண்குழந்தைகளை சிறு வயதிலேயே கள்ளிப் பால் கொடுடத்து கொலை செய்து விடுகிறார்கள்
இந்து மதத்தில் அர்த்தநாதீஸ்வர தத்துவம் எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும்., பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும். அர்த்தநாதீஸ்வரரரின் தோற்றம் சிவனும் சக்தியும் ஓன்று என்பதை காட்டுகிறது.
சில வருடங்களுக்கு முன் பாக்கிஸ்தானின் வட பகுதியில் வாழும் பூர்வ குடிமக்கள் பஞ்சாயத்தின் பின் ஒரு தலித் பெண்ணை பலர் சேர்ந்து கற்பழித்தனர். இஸ்லாம் மதத்தில் பெண்கள் அடிமைகளாக கருதப்படுகின்றனர். மலலா யூசுஃப்சாய் (Malala Yousafzai): ஜூலை 1997 பிறனைத் பெண் கல்விக்கான பாக்கிஸ்தான் ஆர்வலர் மற்றும் இளம் நோபல் பரிசு பெற்ற.வர் வடமேற்கு பாக்கிஸ்தானில் உள்ள கைபர் பாக்தூன்க்வில் உள்ள அவரது சொந்த ஸ்வாட் பள்ளத்தாக்கத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, மனித உரிமைகளுக்கான கட்டுப்பாடு உள்ளதென அறியப்பட்டது, உள்ளூர் தாலிபன் சில நேரங்களில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தடைசெய்தனர். மலலா பெண்கள் கல்விக்கும் உரிமைக்கும் போராடும் ஒரு சர்வதேச இயக்கத்தை உருவாக்கினாள் . அது வளர்ந்துள்ளது.
மதம் அவர்களை ஆண்களைப்போல் சுதந்திரமாக வாழ விடுவதில்லை. வெளியே செல்லும் போது மற்றைய ஆண்கள் பராதவாறு முழு உடலையும், முகத்தையும் கறுப்பு நிறப் பேர்தா எனப்படும் ஆடையால் மூடிய பின்னரே செல்லலாம். இதனை இஸ்லாம் மதம் வரவேற்கவில்லை. கணவன் முன்னாலும்; தங்களது குடும்பத்துடன் சேர்ந்த ஆண்கள் முன்னாலும் இவ்வுடையை அணிய கட்டுப்பாடில்லை.
முற்காலத்தில் சிறுமிகள் ருது வடைந்ததும் இவ்வுடையை அணியவேண்டிய முறை இருந்து வருகிறது. ஆதோடு மட்டுமன்றி தமக்கு அறிமுகமாகாத ஆண்களுடன் உரையாடப் பயந்து ஓடி ஒளிவார்கள் பெண்கள். நாடோடிகளாக வாழும் இனத்துப் பெண்கள் பேர்தாவுக்கு முக்கியயிடம் கொடுப்பதில்லை காரணம் அவர்கள் ஆண்களைப் போல் தமது குடும்பத்தைக் காப்பாற்ற தொழில் செய்வதேயாம். அனேகர் விவசாயத்தில் ஈடுபடுவதினால் அவ்வாடை இடைஞ்சலாக இருப்பது முக்கிய காரணமாகும்.
பேர்தா என்ற பெண்களின் ஆடைக்கு இஸ்லாம் மத நூல்களில் அவ்வளவுக்கு விளக்கம் கொடுக்கப்படவிலலை. இஸ்லாம் மதம் தோன்ற முன்னரே மத்திய கிழக்கு நாட்களில் இவ்வாடையை பெண்கள் அணிந்தார்கள் என்கிறது வரலாறு. அதற்கு முக்கிய காரணம் பழங்குடி இனங்களுக் கிடையே போர் நடக்கும் போது பெண்களின் அழகின் மேல் மோகம் கொண்டு திருடிச் சென்று தமது ஆசைநாயகிகளாக வைத்திருந்ததே. தமது முழு உருவத்தையும் அவர்கள் பாராது இருக்கவே அவ்வாடையை பெண்கள் பாதுகாப்பு கருதி அணியத் தொடங்கினர். கணவன்மாரும் தந்தைமாரும் தமது பெண்களை பயத்தினால் வீட்டுக்குள் பூட்டி வளர்த்தனர். காரணம் அக்காலத்தில் பெண்கள் பொருhதார சொத்தாக மதிக்கப்பட்டனர். பெண்கள் திருமணம் செய்யும்; போது ஆண்கள் சீதனம் கொடுத்து திருமணம் செய்யும் வழக்கம் இன்றும் இஸ்லாம் மதத்தினரிடம் இருந்து வருகிறது. திருமணத்தின மூலம் பல இனத்தினிடையே உறவு வலுவடைகிறது. அவ்வுறவுக்கு பெண்களின் பங்கு அத்தியவசியமாகிறது.
ஆப்கான். செளதி அரேபியா போன்ற தேசங்ளில் பெண்களாக பிறப்பது போன்ற கொடுமை வேறு இல்லை என்பது பல பெண்கள் இயக்கங்களின் கருத்தாகும். அந்நாட்டில் பெண்களி;ன் வாழ்க்கை முறை ஆண்களினது வாழ்ககைமுறையிலும் பார்க்க வெகுவாக வேறுபட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்கு வாழும் பழமையில் ஊறிய பழம் குடிமக்களி;ன மூடத்தனம் நிறைந்த கலாச்சாரமும்; , அவர்கள் மதக் கொள்கைகளும் . ஆண் ஆதிக்கம் மிக்க தலைவர்களுமே. 1959ல் ஒரு சமூக விழுப்புணர்வு தோன்றிற்று. அரசின் ஆதரவுள்ள சட்றி என அழைக்க்கப்படும் முழு உடலையும் மறைக்கும் கறுப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடாது ஒதுக்கி வைக்கப்பட்டது.
1920ம் ஆண்டு அமனுல்லா என்ற ஆப்கான் தேசத்து மன்னன் இந்த ஆடையினை பெண்கள் கட்டாயமாக அணிவதை நீக்க சட்டம் கொண்டு வர முயற்சித்தபோது மதத்தலைவர்களின் எதிர்ப்பால் பின்போடப்பட்டது. இன்றும் பேர்தாவை முற்றாக நீக்க முல்லா எனப்படும் இஸ்லாமிய மதவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இவர்கள் பழமையில் ஊறியவர்கள் மட்டுமன்றி இஸ்லாம் மதத்தினை தமக்கு சாதகமாக வலைத்து மக்களை மயக்கி தமது கையுக்குள் வைத்திருப்பவர்கள். ஆப்கான் பெண்கள் கணவன்மாருடன் வெளிநாடு செல்லும் போது பேர்தா அணிவதில்லை. 1950ம் ஆண்டு இறுதியில் காபூல் வானொலி நிலையம் பெண் அறிவிப்பாளர்களையும் பாடகிகளையும் பாவித்தது. 1958ம் ஆண்டு இலங்கையில நடந்த ஆசிய பெண்கள் மகாநாட்டுக்கு ஆபகான பெண்களும் சென்று பங்குகொண்டனர். 1959 ஆண்டு காபூலில் உள்ள சீன தொழிறசாலையில் ஆண்களுடன் சரிசமனாக பெண்களும் வேலைசெய்தனர். 1959ல் பிரதம மந்திரியாக இருந்த தாவூத் என்பவர் இராணுவத்தின் ஆசியுடன் பேர்தா அணிவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு படித்த பெண்கள் வேலை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசு முடக்கப்பட்ட பெண்கள் உரிமைகளுக்கு சில சலுகைகள் வழங்கியது.
சீதனம் கொடுத்தால் திருமணம் நிட்சயமாகிவிட்டது என்பதாகும். படிக்காத மக்களிடையே திருமணம் பேசி ஒழுங்கு செய்யப்பட்ட திருமணமாகவே பெரும்பாலும் அமைகிறது. காதல் திருமணஙகள் வெகு குறைவு. பெண்ணை தேர்ந்தெடுப்பதில் பெற்றோரின் பங்கு அவசியமாகிறது. தமக்குத் தெரிந்த குடும்பத்தில் இருந்தே பெண் எடுக்க மணமகனின் பெற்றோhர் பெரிதும் வீரம்புசர். அகையால் சொந்தத்துக்குள்ஈ அதுவம் மாமன் மகளையே திரமணம் செய்யும் முறை வழக்கில் இருந்து வருகிறது. சிறுவயது முதற்கொண்டு பழகி வந்ததால் ஆணமு; பெண்மு; திருமணமானபின் தம்மிடையே உள்ள பிரச்சனைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ள முடிகிறது. மணமகனுக்கு தீரமணமாகும் போது வயது 18க்கும் 21க்கும் இடையில இருக்கும். பெண்கள் 16க்கும் 18க்கும் இடைப்பட்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கு ஆண்கள் சீதனத்தைக்; கொடுத்து திருமணம் செய்வதற்கு பல காரணஙகள் கொடுக்கப்படுகிறது. ஒன்று பிறந்த குழந்தைகளை விவாகரத்தின் பின பெண்பராமரிக்கவும்,; தான் வாழவும் உதவுகிறது. சீதனம் கொடுப்பது ஒரு திருமண ஒப்பந்தமாக கருதப்படுகிறது. திருமண விழா அனேகமாக மூன்று நாட்களுக்கு நடைபெறும். இஸ்லாத்தின்படி, ஆண், நான்கு தடவை திருமணம் செய்யமுடியும். இஸ்லாமியர்களின் ஜனத்தொகை பெருக இக்கொள்கையும் ஒரு காரணமாகும். அதோடு குடும்பக் கட்டுப்பாட்டினை இஸ்லாம் ஆதரிப்பதில்லை. அதனால் பெண்கள் பெரும் பாலும் பிள்ளைகளைப் ஈன்றெடுக்கும் இயந்திரங்களாகவே கருதப்படுகின்றனர். பெண்கள் தமது கணவன்மாரி விருப்பு வெறறுப்புகளுக்கு ஏற்றவாறு வாழ்வது அவசியம். பிற ஆடவர்களுடன் கள்ளத் தொடர்பிருப்பின் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை மரணமாகும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கணவனுடன் சேர்ந்து தீர்த்து வைப்பது அவளது கடமைகளில் ஒன்றாகும்.
விவாகரத்து என்பது அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயமில்லை. சாட்சிகளின் முன் மனைவியிடம் “நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்” என்று மூன்று தடவை சொன்னால் மட்டும் பொதும். சட்டப்படி விவாகாரத்து செல்லுப்படியாகும். ஆனால் இந்த முடிவை ஆண் எடுக்க முன் சமூகத்தில் தனக்கு ஏற்படும் அவமானத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும். குடும்பச் சொத்தானாது பெற்றோரின் மரணத்திற்கு பின்னர் மகன் மாருக்கே போய்சேரும் காரணம் பெண்களுக்கு சீதனம் கிடைப்பதினாலேயாம்.
இவ்வளவுக்கும முன்னேறிய நாடான அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதியாக பெண் வரமுடியவில்லை. அதே நேரம் பின் தங்கிய ஆசிய நாடுகளில் பெண்கள் பிரதம மந்திரியாக வந்திருக்குறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
