உலகத்தின் உண்மை
உலகம் - இது ...
உன்னதமான பல உள்ளங்களை
உள்ளடக்கிய உன்னதமான இடம் !
பல பரிமாணங்களைக் கடந்த
பல்சுவைக் கதாப்பாத்திரம் !
ஈடு இணையற்ற வளங்களையும்
இன்பமான வாழ்வையும் தந்த வள்ளல் !
இயற்கை காட்சிகளாய்
இதயத்தை கொள்ளை கொண்ட
இணையில்லா கலைக் கூடம் !
ஏன் பொய் சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா ?
இல்லை. நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன் !
-அது அன்றைய உலகம் !
அனால் இன்று...
உருபடாத பல உருவழிந்த உள்ளங்களை
உள்ளடக்கிய உருவம் இது !
ஜாதி, மதம், இனம், மொழி எனும்
வெறிபிடித்த கதாபாத்திரம் இது!
இயற்கையெனும் இணையில்லா செல்வத்தை
இல்லாமல் போகச்செய்யும் செயற்கை இது !
மனிதன் என்ற பெயரில்
நாயாய், நரியாய், பாம்பாய்
பற்பல விலங்குகளைக் கொண்ட
சீரழிந்த சமுதாயம் இது !
திரி இல்லாமல் எரிய முயற்சிக்கும்
இருளான விளக்கு இது !
ஆம் !
இன்றைய உலகத்தின் இயற்கை இது !
ஓ மனிதா !
உலகத்தைத்தானே சொல்லுகிறான்...
நமக்கென்ன என நினைக்கிறாயா?
உலகமே நாம் ... நாமே உலகம்
என்பதை மறந்து விடாதே!
நம்மை நாம் மாற்றிக்கொண்டால்
உலகமும் உண்மையாய் மாறும் !