மருட்பா
பிச்சை எடுத்துப் பிழைப்பதைக் காட்டிலும்
இச்சையுடன் நீயும் இயன்றளவு ஏதேனும்
அச்சமின்றிச் செய்து அரைவயிறு உண்டாலும்
கொச்சையில்லை. நாளும் கொடுப்பார்க்கை நாடாது
நம்பிக்கைக் கொண்டு நடந்தால்
தெம்புடன் வாழ்ந்திடத் திறனும் பிறக்குமே!
*மெய்யன் நடராஜ்