தமிழ் கடவுள்
அழகெனப் பிறந்தாய்
ஆறுமுகமாய்த் திகழ்ந்தாய்
இவ்வுலகை மட்டுமின்றி
ஈரேழு புவனங்களைக் காத்து நின்றாய்
உன் மழலைச் சொர்க்களால்
ஊரெங்கும் இனிமைத் தரசெய்தாய்
எத்தகைய பகைவரும் பதறும்படி
ஏனைய தேவர்களும் வணங்கும்படி
ஐங்குறுநிலங்கள் போற்றும்படி
ஒப்பற்றுத் திகழ்ந்தாய்
ஓங்கும் தமிழைப் பாடும்
ஔவையைச் சீடனாய் ஏற்று
அஃது காத்தும் நிற்கும் முருகப்பெருமானே
சிவசக்தியின் புதல்வன் சரவணனே
உனக்குச் சரணம்