இலக்கு
இலக்கு நீ அடைய நினைப்பது அல்ல,
நீ அடைந்ததை பிறர் அடைய நினைப்பது.
இலக்கு கால் தரையாக இருக்கலாம்,
அல்லது வான் மலையாக இருக்கலாம்.
தரையையும் மலையென நினைப்பது
இலக்கு அல்ல,
மலையையும் தரையென நினைப்பது இலக்கு.
உன் இலக்கி்ற்கு எல்லை போடாதே,
உன் இலக்கால் எல்லை போடு...
வாழ்விற்கு மட்டுமல்ல,
வானிற்கும் தான்..