பூச்சிடாத நாணம்

பூச்சிடாத முகமதில்
அந்த
கன்ன குழி
தான் அழகு...

வண்ணமிடா இதழ்களில்
சிறு
புன்னகை
தான் அழகு...

வெட்டிவிடும் தலைமுடியை
விட நீள
கூந்தல்
தான் அழகு...

திருத்திய புருவம்தனை விட
அன்பு மிளிரும்
கண்கள்
தான் அழகு...

செயற்கை பூசாத
பெண்மைக்கு
நாணம் தான் அழகு...

#யாரிருப்பார்கள்_இப்படி
??

#பூச்சிடாத நாணம்
-கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (26-Feb-18, 9:46 pm)
பார்வை : 464

மேலே