சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 47 – விநதாஸுதவாஹந ஸ்ரீரமண - ஜயந்தஸேந

பொருளுரை:

வினதையின் குமாரனான கருடனை வாகனமாகவுடைய லக்ஷ்மிபதியே! மனமார உன்னைச் சேவிப்பேன்.

உன்னைச் சதா தரிசிக்காத ஜீவனம் எதற்கு? பிறரைத் துன்புறுத்தும் வாழ்வெதற்கு?

மத வேறுபாடென்று சகர்கள், நாஸ்திகர் ஆகியோர்க்குச் சம்மதமான வாதங்களைப் புரிவது சுகமா? இவ்வுலகில் நல்லோர் இணக்கமே இன்பந் தரும். தேவரைப் பாலித்தவனே!

பாடல்:

பல்லவி:

விநதாஸுதவாஹந ஸ்ரீரமண
மநஸாரக ஸேவிஞ்செத ராம (விநதா)

அநுபல்லவி:

நிநு ஸாரெகு ஜூட நி ப் ரதுகேல
மநுஜுல நேசே ஜீவந மேல (விநதா)

சரணம்:

மதபே த மநே சகநாஸ்திக1 ஸம்-
மத வாக்குலு ப ல்குட ஸுக மா
க்ஷிதிலோ ஸத்ஸங்க தி ஸௌக் யமு பா–
லித த்யாக ராஜாமர(பால)பூஜித (விநதா)

1சகநார்ச்சக

யு ட்யூபில் Vinatha Sutha Vahana Sri Ramana என்று பதிந்து KJ.யேசுதாஸ் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் 01 Vinatha – Jayanthasena என்று பதிந்து விஜய் சிவா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் 03 Sikkil C Gurucharan vinatA suta vAhana shrIramaNa என்று பதிந்து சிக்கில் C.குருச்சரண் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Vinatasuta by Rithvik Raja என்று பதிந்து ரித்விக் ராஜா பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-18, 9:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே